Thursday, November 11, 2010

ஹவ் ஸ்வீட் விஜி :)உற்றுப்பார்த்தா,,அட !!! என்னது என் ரத்தம் மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி மெரூன் கலரில் இருக்கு, இதை ரத்தமெடுத்த அம்மினிகிட்ட கேக்கலாம்னு நினைச்சேன், ஏற்கனவே 3 டைம் ரத்தம் எடுத்துட்டாங்க, இதையும் கேட்டா கடுப்பில இன்னும் ரெண்டு குத்து குத்திருவாங்கன்னு பேசாம இருந்துட்டேன். எத்தனையோ முறை யாருக்கெல்லாமோ துணைக்கு மருத்துவமனைக்கு போயிருக்கேன், எனக்கும்தான், ஆனால் இந்த முறை ரொம்ப வித்யாசமா இருந்தது.

ஒரு பத்து நாளாகவே முதுகு, தோள் சில சமயம் நெஞ்சுவலியும் அதும் முக்கியமாக வண்டி ஓட்டும்போது குப்புன்னு வேர்த்து தலை சுத்துவது போலவும், ரெண்டு கையும், தோளும் செம வலியா இருந்தது, சரி நாம தீபாவளிக்கு ஒரு அளவுக்கு வேலை செஞ்சு ஓவரா சாப்பிட்டோம் போலன்னு நினைச்சுட்டு பவண்டோ, கோக், லெமன் ஜூஸ், மோர் இன்னபிற ஜூஸா உள்ள தள்ளி சரிபண்ணிடலாம்னு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். அன்னைக்கு காலையிலிருந்தே வலி அதிகமா தெரிஞ்சது, ஃப்ரெண்ட்ஸ் கூட ஃபுல் டேவும் ஷாப்பிங் அதனால பெரிசா எடுத்துக்கலை, நைட் தூங்க முடியலை, படுக்க முடியலை வலி நேரம் ஆக ஆக ரொம்ப ஆகிடுச்சு, எனக்கு அலோபதி மருந்துன்னாவே பயங்கர அலர்ஜி.. வேற வழியில்லாமல் ஒரு பெயின் கில்லர் சாப்பிட்டு தூங்க ட்ரை பண்ணினேன்.
காலையில் சரி மொய் வச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு ஹாஸ்பிடல் போனோம், வேற எங்க குப்புசாமிக்குதான்..


ஹாஸ்பிடல் என்பது ரொம்ப ஆடம்பர பொருளாக மாறி ரொம்ப நாள் ஆயிடுச்சு, டாக்டர் ஃபீஸ் 200, அதும் ஒரே நாள் தான் அடுத்த நாள் மதியத்துக்குள்ள வந்து டெஸ்ட் ரிப்போர்ட் காட்டிடனும். இல்லைன்னா மறுபடியும் மொய். டாக்டர் செக் பண்ணிட்டு சினிமால வரும் கொடுமைக்கார மாமியார் தரும் வரதட்சனை லிஸ்ட் மாதிரி பெரிய லிஸ்ட் எழுதி கொடுத்தார், பார்த்ததும் பக்ன்னு இருந்தது,
இதுல தைராயிடு, ப்ளட் சுகர், ப்ளட் கொலஸ்ட்ரால், ப்ளேட்லெட்ஸ், யுரின் சுகர், எக்கோ, இசிஜி, எக்ஸ்ரே அப்படின்னு சிலது புரிஞ்சும், பலது புரியாமையும் இருந்தது.

ரெகுலரா மருத்துவமனைக்கு போயி பழகிட்டதால் எல்லா டெஸ்டும் வெளியில் எடுத்துட்டு வரலாம்னு வந்துட்டேன், ஏனெனில் வெளியில் விட மருத்துவமனை இரண்டரை மடங்கு அதிகம், உதாரணத்திற்கு வெளியில் குறிப்பிட்ட தைராயிட் டெஸ்ட் தைராய்ட் கேரில் 250 ரூபாய், அவர்கள் அதை சென்னைக்கு அனுப்பி ரிப்போர்ட் வர இரண்டு நாளாகும், மைக்ரோலேபில் 400 ரூபாய், அன்றே ரிப்போர்ட் கிடைக்கும் ஆனால் மருத்துவமனையில் 1000 ரூபாய்.. கண்ணுக்குமுன்னாடி கொள்ளை, வேற வழியில்லை டாக்டர்கள் சொல்லும் டெஸ்ட் எடுத்துத்தான் ஆகனும்,

அடுத்த நாள் காலையில் சாப்பிடாம ஒரு டெஸ்ட், சாப்பிட்டதுக்கப்பறம் ஒரு டெஸ்ட், வாந்தி வரும் அளவு க்ளுகோஸ் குடிச்சு அதுல ஒரு டெஸ்ட், எந்திரன் பார்ட் டூ மாதிரி உடல் முழுதும் வயர் வச்சு, ஜில்லுன்னு ஜெல் தடவி, சுத்தியும் பீப், பீப்ன்னு சவுண்டோட செம எஃபெக்டில் டெஸ்ட், குகை மாதிரி தனியா உள்ள போயி கண்ணை திறக்காதேனு சொல்லும் போதே இப்பவே திறந்து பார்க்கனும்னு தோனும் டெஸ்ட், இப்படின்னு ரொம்ப வேலை வாங்கிட்டாங்க

எல்லா ரிப்போர்ட்டும் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போனால், டாக்டர் எல்லாம் பார்த்துட்டு சிலது சொன்னாரு, என்னவா அது எதுக்கு அது வேண்டாம், நான் ரொம்ப நல்லவ,ஸ்வீட் பர்ஸன்னு எல்லாருக்கும் தெரியும், இப்ப மருத்துவ ஆய்வறிக்கையும் அதே தான் சொல்லுது.. அதுக்கப்பறம் டாக்டரு ஒரு பார்வை பார்த்துட்டு என்னமோ எழுதினாரு, ஒரு வேளை ப்ளாக்கரா இருக்குமோன்னு டவுட்டா பார்த்தேன், ஏன்ன்னா அம்புட்டு சீரியஸா எழுதிட்டு இருந்தாரு.

4 வகையான மாத்திரை, நாலு கலர்ல, ஒண்ணு கூட எனக்கு பிடிச்ச வயலட் கலரில் இல்லை என்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, இது வரைக்கும் காய்ச்சலுக்கு கூட மருந்து சாப்பிடாம டிமிக்கி கொடுத்து கட்டிலுக்கு அடியில் போன க்ரோசின், கால்பால் இன்ன பிற மாத்திரைகள் பெரிய சைஸில் கண்ணுக்கு முன்னாடி வந்து - இப்ப என்ன பண்ணுவேன்னு குத்தாட்டம் போட்டுச்சு. அதும் இத்தனை மாத்திரையும் வருசகணக்கில சாப்பிடனுமாம். அதுசரி. நடக்கறகாரியமா இதெல்லாம்.

அதுக்குள்ள வந்தாரு ஒரு ஆபத்பாந்தவன், இன்னும் ஆறு மாசம் டைம் எடுத்துக்க விஜி, இதெல்லாம் ஒரு பார்டர் லைனில் தான் இருக்கு, ரெகுலர் வாக்கிங், உடற்பயிற்சி, வகைதொகையில்லாம சாப்பிடறதை நிறுத்தி, வெயிட் 10 கிலோ குறை, யு வில் பி ஆல்ரைட்ன்னு சொன்னாரு :) இப்பத்தான் மூச்சே வந்தது, வேற வழியில்லை, செய்துதான் ஆகனும்

இன்னைக்கு முழுசும், சீசன்ஸ், பைரவி, சி.எஸ், கிருஷ்னா டிபன் ஹவுஸ், அருண் ஐஸ்க்ரீம் என்று எல்லா இடங்களுக்கும் விசிட், என்னன்னா நாளையிலிருந்து நான் டயட்டு டயட்டு டயட்டு,..:)

30 comments:

கவிதா | Kavitha said...

மாசம் இனிமே எங்க விட்டுக்கு ஒரு 2 கி சர்க்கரை (மட்டும் போதும்) அனுப்பிடு...

தமிழ் உதயன் said...

சீக்கிரம் சின்ன பொண்ணா மாற போறீங்க இல்லையா?

யாசவி said...

குப்புசாமி எனக்கு தெரிந்தவரை கோவையில் ஓரளவு பணம் பிடுங்காத ஆஸ்பத்திரி என்று நினைக்கிறேன்.

உடம்ப பார்த்துக்கோங்க.

:)

கோபிநாத் said...

ம்

ஈரோடு கதிர் said...

ஒரு மாத்திரை கூட மெருன் கலர்ல இல்ல!

(:

அமுதா கிருஷ்ணா said...

ஆக...நடங்க..நடங்க..நடங்க..அது தான் டயட் கண்ட்ரோலை விட சிறந்தது..

Anonymous said...

//ஒரு பார்வை பார்த்துட்டு என்னமோ எழுதினாரு, ஒரு வேளை ப்ளாக்கரா இருக்குமோன்னு டவுட்டா பார்த்தேன், //

நம்ம புத்தி நம்ம விட்டு போகுமா என்ன?

Anonymous said...

மருத்துவம் என்பதே பகல் கொள்ளையாய் மாறிப்போயிருக்கு இந்த காலத்தில் வசதி இல்லாதவர்கள் நிலை?

கடைசியா சொன்னது போல டயட் உடற்பயிற்சி வாக்கிங் பெட்டர்

பெரியவங்க சொன்னது போல் வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடுன்னு (வாணியன்..வியாபாரி)ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ

R.Gopi said...

//இன்னைக்கு முழுசும், சீசன்ஸ், பைரவி, சி.எஸ், கிருஷ்னா டிபன் ஹவுஸ், அருண் ஐஸ்க்ரீம் என்று எல்லா இடங்களுக்கும் விசிட், என்னன்னா நாளையிலிருந்து நான் டயட்டு டயட்டு டயட்டு,..:)//

******

ஹா...ஹா...ஹா...

அது எப்படிங்க... நாம இன்னிக்கு சொல்றது தான் என்னிக்குமே... அப்படின்னா, நாளைக்கு கூட அங்கிட்டு எல்லாம் பார்க்க சான்ஸ் இருக்கு....

Gopi Ramamoorthy said...

என்னை மாதிரி அப்பாவிக் கைப்புள்ளைகளைக் கலாய்த்தால் இப்படியெல்லாம் ஆகும்:) விளையாட்டுக்கு சொன்னேன்!

நிறைய வாக் பண்ணுங்க, சரியாப் போய்டும். வாக் பண்ணத் தனியாப் போனா போரடிக்கும். யாரையாவது துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.

ஜெய்லானி said...

மாத்திரையை சொட்டு நீலத்தில நனைச்சி சாப்பிடுங்க சில கலர் காம்பினேஷன் பிடிச்ச வயலட் கலரை குடுக்கும் ..!! :-))

ஜெய்லானி said...

கூடுமானவரை காலையில வெறும் வயத்துல பச்சை தண்ணீரை குடிச்சிட்டு கொஞ்சமா நடங்க ..கூடிய விரைவில நல்ல பலன் கிடைக்கும்..!! :-))

சுசி said...

விஜி செல்லம்.. இதுக்கும் என் வயித்தெரிச்சலுக்கும் சம்பந்தமே இல்லடி..

எல்லாம் சீக்கிரம் சரி ஆய்டும்.. சரியா??

ஆபத்பாந்தவன் சொன்னது ஹெல்ப் பண்ணும். செய்ப்பா.

பஞ்சவர்ணசோலை said...

எவ்வளவு பெரிய பெரிய மாத்திரை வேண்டவே வேண்டாம்

டயட்டு இருக்கரபோறேன்னு உடம்பை கெடுத்துக்காதீங்க நல்லா சாப்பிட்டு உடற்பயிற்சி செய்ங்க :))

விக்னேஷ்வரி said...

டேக் கேர் விஜி.

LK said...

muraiyaana unavu. nerathirkku thoonguthal udarpayirchi moondrum uthavum

விஜி said...

@கவிதா.. அனுப்பிடறேன்,, :)

விஜி said...

@உதய்,, ஏன் ஏன் ????

விஜி said...

@யாசவி அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன், இப்ப அது தான் இருப்பதிலேயே காஸ்ட்லி ஹாஸ்பிடல் :(

விஜி said...

@கோபி ம்ம்ம்ம்ம்:))

விஜி said...

கதிர்.. விடுங்க அடுத்த டைம் போகும் போது கேட்டு வாங்கிடலாம்,, அது சரி நீங்க சிவப்பு கலர் தானே கேக்கனும் :)

விஜி said...

@அமுதாக்கா :)) நடக்கறேன் நடக்கறேன்

விஜி said...

@தமிழு :)) தான் ஆடாட்டியும் தசை ஆடும்.. அதே டயலாக்தான் :)

விஜி said...

@கோபி , கரீட்டா சொல்லிட்டீங்க :)

விஜி said...

@கோபி ராமமூர்த்தி,,, ம்ம்க்க்கும் :))

விஜி said...

@ஜெய்லானி,, வாட் எ ஐடியா ஜெய்ஜி :))

விஜி said...

@சுசி, :)) செஞ்சுட்டா போகுது. இதுக்காகவெல்லாம் நம்ம ட்ரீட் நிக்காது.

விஜி said...

@பஞ்சவர்ணசோலை,, சரிங்க :)

விஜி said...

@ விக்கி.. யெஸ் :)

விஜி said...

@எல்.கே தேங்க்ஸ்ங்க எனக்காக இல்லனாலும் என் குடுமபத்துக்காக செய்தே தீரனும்

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க