Thursday, October 7, 2010

காமினி, என்னை காப்பாத்து !!! (சவால் சிறுகதை)

காமினிக்கு மூச்சை அடைத்தது. எப்படியாவது செத்து போயிடனும் என்று வெறியானது, சுற்றிலும் டாக்டர், நர்ஸ் என்று ஆட்களும் இந்த சிகிச்சையும், நேரம் கடந்து கொண்டிருக்கிறது. யோசித்து முடிவெடுத்தாள்,

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.. இதோடு முடிந்தது..

---

 தேவிகாவை திருமணம் செய்ய ஒரே தடை காமினிதான், எப்படியாவது அவளை நகர்த்திட்டால் எந்த பிரச்சனையும் இல்லை, அதனால் வீட்டுக்கு வர வைத்து காமினியை பயமுறுத்தி அனுப்பிடவேண்டும் என்று காத்திருந்தான், ஆனால் அவள் எதற்கும் ஒத்து வர வில்லை, கடைசியில் சாரி எனக்கு வேற வழிதெரியலை என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்தான் சிவா..

----

அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியின் தலைவர் பரந்தாமன் சந்தோசத்தில் இருந்தார், அவர் முன் வைரமும், காமினியும், வெல்டன், எப்படியோ போலீஸ் கண்ல மண்ணை தூவிட்டு இந்த டைமண்டை கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன்...


----

ச்சே,,  மூன்று பேப்பரையும் கசக்கி வீசினான், ஆனந்த், ம்ம் காமினின்னு கேரக்டர்ல நடிக்கற ஆர்டிஸ்ட் இனி கண்டினியூ பண்ணலைன்னு சொல்லிட்டாங்க, அந்த கேரக்டரை கொல்லுவதா, இல்ல வேற ஆளைப்போட்டு கண்டினியூ பண்ணுவதான்னு புரியலையே. டைரக்டர்கிட்ட என்ன சொல்லுவது என்று எரிச்சலுடன் யோசித்தான், தினம் ஒன்பது மணிக்கு வரும் சொர்க்கத்தில் ஒரு நாள் சீரியலின் ரைட்டர் ஆனந்த்..
 
ஆயிரம் பொற்காசு தரலைன்னாலும் பரவாயில்லை, ஆறுதல் பரிசாவது அனுப்பி வைக்கவும், அப்பறம் நான் தான் முதல் கதை இந்த சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைத்தேன் அதையும் நினைப்பில் வைத்துக்கொள்ளவும் நடுவர்களே :)))

16 comments:

கோபிநாத் said...

:))) கடமை

ரோகிணிசிவா said...

:)) கொடுமை

சுசி said...

இது தான் கிரேட் விஜி ஸ்டைல்..

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Anonymous said...

விஜி எங்களை விட்டு விடு...

Santhosh said...

:)) கண்ணியம் :)) கட்டுப்பாடு..

ஜெய்லானி said...

பரவாயில்லை டிரை பண்ணி இருக்கீங்க :-))

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

விஜி said...

கோபி :)) தேங்க்ஸ்

விஜி said...

ரோகினி :) பொறாமை

விஜி said...

தேங்க்ஸ் சுசி :)

விஜி said...

தமிழு பொழச்சுப்போ :))

விஜி said...

சந்தோசு :))

விஜி said...

ஜெய்லானி தேங்க்ஸ்ங்க

விஜி said...

அபி படிச்சேங்க :)

Unknown said...

நல்லா இருக்கு!
ஆனா முதல் மூன்று பராவையும் இன்னும் டெவலப்பண்ணி detailலா சொல்லி இருக்கலாம்! வாழ்த்துக்கள்! :)

Unknown said...

ஆயிரம் பொற்காசு தரலைன்னாலும் பரவாயில்லை, ஆறுதல் பரிசாவது அனுப்பி வைக்கவும், அப்பறம் நான் தான் முதல் கதை இந்த சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைத்தேன் அதையும் நினைப்பில் வைத்துக்கொள்ளவும் நடுவர்களே :)))

kadhaiya vida, indha comments dhaan romba nallaa irukku :) vaazhthukkal. Parisu kedachudhaa?

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க