நலமா?
இரண்டு மாதங்கள் தான் எழுதாமல் இருந்திருக்கேன், ஆனால் கடந்து போன 65 நாட்களும் கற்றுக்கொடுத்த பாடங்கள் மீதமிருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவும்.
வலிக்காமலே வாழ்வில்லையே..ரொம்ப சரிதான், இதுவரைக்கும் எவ்வளவோ வலிகள் வந்து போயிருக்கிறது. எப்ப நினைச்சாலும் வலிக்ககூடியது ஒன்றுதான். கால் தடுக்கி விழுந்து இடது கை மணிக்கட்டு இரண்டு இடத்தில் நொறுங்கியது. வலி உச்சந்தலையில் இறுக்கி பிடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைகள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு போல. ஆனாலும் அந்த காலை வேளையில் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட என்னையும் சேர்த்து 20 பேர் இருந்தோம். வலி மறக்க செய்யும் மருந்து ஊசிமூலம் இடது கை தோள் பகுதியிலும் கழுத்திலும் போடப்பட்டது. உடைந்த கை என்னோடதே இல்லை என்பது போல் தனியே கட்டுப்பாடின்றி சுழன்றது.
உடைந்த மணிக்கட்டுக்கு பின்னிங் என்னும் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடைப்பின் தன்மை பொறுத்தும் தேவை பொறுத்தும் பின் எண்ணிக்கை அமைகிறது. சுவற்றில் ஓட்டை போடும் ட்ரில் மிசின் மாதிரி ஒரு ட்ரில் மிசினில் கை எலும்புகளில் ஓட்டை இடப்பட்டு பின்கள் பொருத்தப்படுகிறது. நீளமாக இருக்கும் அவைகள் தேவைபோக வெட்டப்பட்டு மடக்கி விடப்படுகிறது. உணர்வுகள் மறத்துப்போவதால் வலியின்றி இந்த சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேல் வழக்கம் போல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு. வலியே இல்லை, கை மிக கனமா, எதோ ஒரு தேவையற்ற பொருளை சுமப்பது போல ரொம்ப உறுத்தலா இருந்தது. ஒரு 4 மணி நேரம் கழித்து தான் நரகம் தெரிந்தது.
ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க முடியாது, கையில் பெல்ட் போட்டு தோள் வழியே கழுத்தில் மாலை மாதிரி ஒரு தொட்டில் வேறு. இந்த இடம் தான் வலிக்குது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் கை, விரல்கள், தோள் பட்டை, பின் கழுத்து, முதுகு என்று வலி வலி வலி மட்டுமே. தூக்கம் தொலைத்த மிக நீண்ட 6 வார காலங்கள். வீக்கம் குறைந்து சிறு இடைவெளி தெரிய ஆரம்பித்ததும் தோலின் வறட்டுத்தன்மை காரணமாக அரிப்பு வேறு. ஏதாவது பூச்சி உள்ள போயிட்டா என்ன பண்றது என்ற கவலை.
எல்லாவற்றையும் விட கொடுமை, ஒரு வேலையும் செய்ய முடியாமல் முடக்கி போட்டதுதான். தலை பின்னக்கூட இன்னொருத்தர் தயவு தேவை.
ஒரு கையை கொண்டு என்னதான் செய்து பழக முடியும்? இல்லாத போதுதான் அதன் உபயோகம் தெரியும் என்பது உண்மைதான். கோபம், ஆத்திரம், யாருகிட்டவும் பேசப்பிடிக்காமல், எந்த நேரமும் ஒரு எரிச்சல், எல்லாரிடமும் சிடுசிடுப்பது, தூக்கமில்லாததால் வரும் சோர்வு என்று கூட இருப்பவர்களையும் சேர்த்து வதைத்த நாட்கள்.
6 நரக வாரத்திற்குப்பிறகு கட்டுப்பிரிக்கப்ப்ட்டு பின் அகற்றப்பட்டது. வலியில் மயக்கமே வந்தது. இதற்கு எந்த வலி நிவாரணிகளும் தரப்படுவது இல்லை. பின் எடுத்ததும் கையே ஒரு கோணல் ஆனது போலவும், விரல்களை அசைக்க முடியாத வலியும்....இனி பழைய படி வண்டி ஓட்ட இன்னும் 3 மாதம் ஆகும்.
பின் இணைத்தலும் , அகற்றுதலும் யுடுபில் இருக்கு ஆனால் பார்க்கவே முடியாது. ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனால் அதை விட கொடூரம் எலும்பு முறிவு. வயதானவர்கள், குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டம்தான். ஒரு சின்ன கை எலும்பு முறிவேஇப்படி இருக்கே இடுப்பு உடைந்தவர்கள், கால் உடைந்தவர்கள்...நினைக்கவே பயமாருக்கு.
இந்த வலியில் எனக்கு ஒரே பொழுது போக்கு, ப்திவுலகம் தான், கூகுள் பஸ் இல்லாட்டி நான் கொலைகாரியாவே ஆயிருப்பேன். இவ்வளவு நடந்ததிலிருந்து ஒன்று நல்லா புரிஞ்சுது.. என்னவா?
நான் ஒத்தைக்கையையிலேயே வேகமா தமிழில் டைப் பண்ணுவேன்,, இப்ப வரைக்கும், இதையும் சேர்த்து, இன்னும் 3 மாசத்திற்க்கு :)))
18 comments:
//இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். //
இந்த வலிக்கு ஒரு ரிவார்ட் இருக்கே. புள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது!!!!!
விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.
உங்களின் பகிவை படிக்கும் போதே வலியின் கொடுமையை உணரமுடிகிறது.....
மீண்டு நலத்துடன் விரைந்துவர.... வேண்டுகிறோம்.
உங்க பகிர்வு மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.....
எப்பவுமே இருப்பதை பத்தி நாம கவலைபடமாட்டோம் .அது இல்லாத போதுதான் அதன் அருமை , பெருமை புரியும் ..சரியா சொன்னீங்க...!!!
விரைவில் நலம் பெற பிராட்தனையுடன்...
||சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. ||
சின்னதுதான் ஆனாலும் தவிர்க்க முடியாமல் போவதுதான் வாழ்க்கை!
ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது.
விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கின்றேன்.
என்ன எழுதுறதுன்னே தெரியலை..
எல்லாம் சரியாய்டும்.. பிள்ளையாரை வேண்டிக்கறேன்..
:((((((((((((((((((((((
நன்றி துளசிமேடம் :)
புள்ளை முகம் பார்த்தால் வலி போயிடாது// போயிடுச்சுங்க :)
நன்றிங்க கருணாகரசு
தேங்க்ஸ் ஜெய்லானி, சவுக்கியமா?
ஆமாங்க கதிர் :(
ராஜராஜேஸ்வரி, வாங்க, இன்னொரு ராஜி :))
சுசி :) சரியா போயிடுச்சுடி :)
தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html
விஜி எதேச்சையா இந்த பதிவு படிச்சேன்... ரொம்ப அருமை.. ஒரு எழுத்து சம்பவத்தை உணர வைக்கனும் உண்மையா பாசங்கு இல்லாம எழுதினா அதை உணர வைக்க முடியும்... இது என் அனுபவம்...
நானும் வலியை உணர்ந்தேன்மா...எனக்கும் வலிச்சிது..
valiyoda vali purigirathu viji...kavanam pls...
//Gopi Ramamoorthy said...
தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html//
இந்த கலவரத்துலயும்... இது வேறயா?
விஜி....
வாழ்வில் வரும் சிறு இடறலே பல நாள் வலியை தருகிறது... கவனம் வேண்டும்...
தாங்கள் விரைவில் மீண்டு வந்தமை கண்டு மகிழ்ந்தேன்...
விரைவில் நலம்பெற வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
Post a Comment
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க