செல்லக்குட்டி, என் தங்கம், என் வெள்ளி .. இதெல்லாம் நான் பப்புவை கொஞ்சுவது இல்லை. அவ என்னை சொல்றது. இப்படி சொன்னா எதோ ஒரு காரியம் ஆகவேண்டி இருக்குன்னு அர்த்தம். தேவதைகளில் வால் முளைத்த தேவதையை பார்க்கனுமா? எங்க வீட்டில் இருக்கா.
சில நேரம் ரொம்ப பேசறாளேன்னு நினைக்கும் போது கூட இப்ப பெரும்பாலும் குழந்தைகள் அப்படித்தான் பேசுகிறார்கள், நாம தடுத்து ஒண்ணும் ஆகப்போவதில்லைன்னு விட்டுடுவேன். இருந்தாலும் எங்க அம்மினி கொஞ்சம் ஓவர் தான்.
பப்பு, ஒரு நடமாடும் இல்ல எப்பவும் ஆடிட்டே நடக்கும் ஒரு பட்டாம்பூச்சிதான். காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பிக்கும் அவள் அட்டகாசங்கள் இரவு தூங்கும் போதும் சில நேரம் தூக்கத்திலும் தொடரும். எழுந்து வரும் போதே கட்டிலில் இருந்து கூப்பிடுவா, அவளை உப்பு மூட்டை தூக்கி வரனும், இனிமேல் முடியாது பெரிய பொண்ணு ஆயிட்டேன்னு சொன்னா, நீங்க தானே சொன்னீங்க எத்தனை வயசானாலும் நான் உங்க குழந்தைன்னு திருப்பி கேட்பாள். ப்ரஷ் பண்ண நாந்தான் தொடங்கி விடனும். அவ ரெடியாகி வந்ததும் எப்படி இருக்கேன்னு இடுப்பில் கை வைத்து ஸ்டைலா கேக்கும் போது பதில் ரெடியா வச்சிருக்கனும்.
பப்பு, அவளை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரு உடனடி புன்னகை உற்பத்தி செய்யும் மந்திரக்காரிதான். நாம் யோசித்து சொல்வதை உடனே சொல்லி அசத்துவாள், சுத்தம், அவளோட பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வது. முக்கியமா சேமிப்பு, தெரியாமல் வெளியில் 5 ரூபாய் வைத்தால் கூட அது அவள் கணக்கில் போயிடும். அவகிட்ட கடன் வாங்கறதை நான் தான் நிறுத்தனும். நேத்து காய்க்காரம்மாவுக்கு தர 40 ரூபாய் எடுத்ததை நைட்டே கேட்டு வாங்கிட்டாள். எதுவும் கேக்கவே மாட்டாள். பிறந்த நாளுக்கு கூட அதிகபட்ச அவளோட ஆசை கலர்பென்சிலாகத்தான் இருக்கும். அவளோட ஷாப்பிங் போன கதை தனி பதிவா வரும்.
காய்ச்சல், சளி எதுவுமே அவளை சோர்ந்து போகச்செய்யாது. எதுவந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இப்பவே இருக்கு. போன மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாள் காய்ச்சலில் இருந்தாள், ஒரு நாள் கூட அழவோ, வேறு எந்த வித சோர்வையுமோ முகத்தில் காட்டவே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ அதை நாம் மறந்தாலும் அவ மறக்கவே மாட்டாள், டயட் என்னன்னு கேட்டுட்டு வந்தாள், அதைத்தவிர வேறு எதையும் தொடக்கூட இல்லை.
பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட். க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.
என் மாமியார் இறந்த போது சிலர் அழுதபோது பப்பு அவளோட கஸின் அவ வயதுதான் அவன்கிட்ட சொல்றா, ”எதுக்கு அழறாங்க? வலியோட இருந்தாங்க, இப்ப காட் கிட்ட போயிட்டாங்க, அங்க வலிக்காதாம், காட் கிட்ட போனா ஹேப்பியா இருப்பாங்க, அப்பறம் எதுக்கு நாம அழனும்னு”
பப்பு, நீயும் வர்ஷாவும் என் குழந்தைகளாக வந்ததால் நான் தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். தேங்க்ஸ்டா செல்லம். நீ என் பொக்கிஷம் தான். எப்பவாவது வாழ்க்கையில் சோர்வுறும் தருணங்களில் தெய்வம் போல் ஒலிக்கும் உன் குரல் தான் என் அடுத்த அடிக்கு ஆதாரம். இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா விரும்பிய அனைத்தும் கிடைத்து ஆனந்தமா இருடா செல்லம்.
இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.
அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்கும் போது இந்த உலகம் அளவுக்குன்னு சொன்னேன், அவ சொன்னது அவளோட இதயம் அளவுக்காம்.
தேங்க்ஸ்டா குட்டி
உனக்கு பிடிச்ச இந்த பாடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ரவுடி பப்பு
இன்னைக்கு தான் ராம் க்கும் பிறந்த நாள் ஹேப்பி பர்த்டே ராம்
20 comments:
பப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வளமும், சிறப்பும் பெற்று வாழட்டும் பல்லாண்டு!! பப்புவின் பெயர் என்ன ? ஆட்சேபனை இல்லை என்றால் போட்டோ ப்லீஸ் .
குட்டி அம்மணி பப்பு மற்றும் மாம்ஸ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))
\\பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட். க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.\\
அப்படியே மம்மி மாதிரியே..இன்னும் தெளிவாக ;-)))
பப்புவோட பெயர் விபாஷா. போட்டா மெயில் பண்றேங்க, மெயில் ஐடி கொடுங்க
பப்பு குட்டிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! :)
குட்டி தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தேவதைக்கா அவ :)
இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பப்பு.
மாம்ஸ்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ..
அபியும் நானும் படத்துல ஒரு வசனம் எனக்கு ஞாபகம் வந்துருச்சு ::: "ஒருகுழந்தை பிறக்கும் போது, கூட ஒரு அம்மா அப்பாவும் பிறக்குறாங்க...."
பப்பு, ராம் சார், பிறந்த நாள் வாழ்த்துகள் !
கேக் எங்கே:-)
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.///
அருமை... பப்புக்கு பிறந்த நாள் வாழ்துக்கள்..!
குட்டிப் பப்புவுக்கும் ராம்ஸுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
PAPPUVUKKU VAAZHTHTHUKKAL!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பப்பு. அம்மாக்கு நிறைய நிறைய பல்பு கொடுத்துகிட்டே இருக்க வாழ்த்துகள்...
குட்டி தேவதைக்கும், ராம் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல இனிய,அன்பை விளக்கும் பதிவு.
பப்புவிர்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா... எல்லா நலமும் வழமும் பெற்று மென்மேலும் தெளிவுடன் வாழ பிரார்த்திக்கிறேன்..
தேங்க்ஸ் கோபி :)
தேங்க்ஸ் கவி :)
தேங்க்ஸ் லஷ்மி :)
தேங்க்ஸ் ஆதவா :)
மேவி கரீட்டு :)
கோப்ஸ் உன் பேரை சொல்லி நானே சாப்டேன்
தேங்க்ஸ் சசிகலா :)
தேங்க்ஸ் தமிழ் அமுதன் :)
ரவி நன்றிங்க :)
சுரேகா .. நன்றி தல
வித்யா .கிர்ர்ர்ர்ர்ர் :)
ரேவா நன்றிங்க
கேதரன் தேங்க்ஸ் :)
கனி தேங்க்யு :)
Post a Comment
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க