பெய்யென்ன பெய்யும் மழை பெய்தவரைக்கும் போதும். கோவம் வந்தா அம்மா குழந்தைகளை நாலு சாத்து சாத்தறதுதான் .அதுக்குன்னு இப்படியா?
அரசியல், சினிமா, மற்ற எல்லாவற்றையும் தாண்டி இந்த மழை வாரிவழித்து சென்றதில் வெறும் வாழ்க்கை மட்டும் மிச்சமிருக்கும் மக்களுக்காக நம்மால் ஆன மிக சிறிய உதவி.
இப்ப இருக்கும் நிலையில் உணவு, உடை, மற்ற பொருட்கள் எப்படியும் எதாவது வழியில் கிடைக்கும், வேற வேற இடங்களில் இருக்கும் நம்மால் எதுவும் நேரடியா செய்ய முடியாத நிலையில் இந்த உதவி அவசியம் தேவை, நம்மால் முடிவதும் கூட.
அன்றாடம் வேலை செய்து அன்றைய பொழுதை ஓட்டும் மக்களிடம் சேமிப்பு என்று எதுவும் இருக்காது. அவர்கள் தொழில் ஆதாரங்களே பெரும் சொத்தா இருக்கும். இந்த வெள்ளம் அதையும் வாரிஎடுத்து சென்றிருக்கும். மழை வெள்ளம் வடிந்ததும் கடலூர் கிராமங்களில் பத்து குடும்பங்களையோ, ஒரு தெருவையோ நமக்கு சேரும் தொகை கொண்டு ஒரு கிராமத்தையோ நம் குடும்பமா நினைத்து எதாவது செய்வோம். உதவின்னு கூட இதை சொல்ல முடியாது. அந்த இடத்தில் நாம இருந்தா யாராச்சும் ஆறுதலா ரெண்டு வார்த்தை சொன்னாகூட போதும்னு நினைப்போமில்லையா?
நடைபாதை கடையில் இட்லி விற்ற அக்காவோ, தள்ளுவண்டியில் துணி தேய்த்து கொடுத்த அண்ணாவோ, பொம்மைகள் விற்ற தாத்தாவோ, செருப்பு தைத்த சகோதரனோ, மெக்கானிக், சைக்கிள் கடை, எலெக்ட்ரிஷியன், கொத்தனார், பெயிண்டர் என்று எந்த வேலையும் அன்னைக்கு செய்து குடும்பததை காபபாற்றிய தொழில் உபகரணங்களை வாங்கி தருவோம்.
ஒரு குடும்பம் நடத்த நாலு ப்ரெட் பாக்கெட் போதுமா? தினப்படி சோறு பொங்கும் பாத்திரத்திலிருந்து பாத்ரூம் மக் வரைக்கும் தொலைந்து போயிருக்கும். மிக அத்தியாவசிய பொருட்களை ஒரு பட்டியல் இட்டு முடிந்த குடும்பங்களுக்கு வாங்கிதரலாம். மீண்டும் அவர்கள் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கத்தானே வேண்டும்.
எத்தனையோ செலவு செய்கிறோம், ஒரு ஷாப்பிங் மால் போனா வண்டி பார்க்கிங் 50 ரூபாய் ஆகிறது. நம் தேவையற்ற செலவை ஒரே ஒரு மாதம் குறைக்கலாம். நாம் தரும் தொகை எத்தனை சின்னதாக இருந்தாலும் அது எதாவது ஒரு பொருள் வாங்க உதவும். இதற்காக ஒரு அறக்கட்டளையோ நிறுவனமோ தேடிப்போவதில்லை. நம் நண்பர்கள் சிலரே இதனை ஏற்று செய்வார்கள். நீங்க தரும் பத்து ரூபாய்க்கும் நாங்க வெளிப்படையான கணக்கை தருவோம். பொங்கல் வரை சேரும் தொகையை வைத்து நம் உடன்பிறவாதவர்களுக்கு சீராக தரலாம்.
இந்த எண்ணத்தில் நண்பர்கள் ஏற்கனவே வேலைகளை ஆரம்பித்து விட்டனர். உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட வங்கிகணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பலாம். வெளிப்படையான கணக்கு இங்கு ஒவ்வொரு கட்டத்திலும் பகிரப்படும். வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய பின் அதனை ஒரு ஸ்க்ரின் ஷாட் அல்லது புகைப்படம் எடுத்து எங்கள் மெயிலுக்கு அனுப்புங்கள் அதுவும் இங்கு பகிரப்படும். . இந்த திட்டத்தை முன்னேற்று நடத்துபவர் சங்கர்ஜி . எங்களில் சிலர் ஏற்கனவே சில காரியங்களை சங்கர் மூலம் செய்து கொண்டிருப்பதால் இதில் அவருக்கு அனுபவமும் உண்டு.
காலத்தில் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் பெரிதுதானே. நன்றி.
mail to : visalatchi.ram@gmail.com
bank details
Name : V.Shanker Ganesh
ICICI ANNANAGAR,
ac no. 602701222117.
Ifsc ICIC0006027

No comments:
Post a Comment
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க