Friday, November 19, 2010

நூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்


திருப்பூர்... மகாபாரத காலத்தில் அர்ஜுனன் பசுக்களை போரிட்டு திரும்ப அழைத்து சென்ற இடம் என்பதால் திருப்பூர் என்று வழங்குவதாக கூறுவர், கடும் உழைப்பாளிகளை கொண்ட ஒரு சிறிய நகரம், கிட்டத்தட்ட 3500 நேரடி ஏற்றுமதி நிறுவனங்களும் அதை ஒட்டி 20,000க்கும் அதிகமான துணைத்தொழில் நிறுவனங்களையும் கொண்டது. இன்றைக்கு திருப்பூரில் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது, அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் இதை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நூல் என்பது முக்கிய மூலப்பொருள், பனியன் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 25% நூல் விலை இருக்கும், அது தவிர நிட்டிங், டையிங், ப்ரிண்டிங், கட்டிங், ஸ்டிட்ச்சிங் என்று மற்ற வேலைகளும் சேர்ந்து தான் பொருளின் விலை, ஆனால் தற்போது நூல் விலை கடுமையான ஏற்றத்தில் இருக்கிறது. மற்ற எந்த நாடுகளும் மூலப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது இல்லை, ஏனெனில் மூலப்பொருளாக ஒன்றை ஏற்றுமதி செய்வதை விட ஃபினிஷ்ட் ப்ராடக்ட் எனப்படும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம், அன்னிய செலாவனி, தொழில்நுட்பத்திறன், உள்கட்டமைப்பு என்று எல்லாத்துறையையும் வளர்க்க
உதவும்.

ஏற்றுமதி ஆர்டர் பெறப்பட்டு அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்கவேண்டும், இன்றைய நிலையில் நூல் விலை தினம் தினம் மாறுகிறது, ஒரு ஆர்டர் பெறப்படும் போது உள்ள விலையில் இருந்து மீண்டும் நூல் விலை அதிகரிப்பால், அதன் உற்பத்தி செலவும் மாறுபடுகிறது,  இதனை பையர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்த அதிகப்படியான விலையேற்றம் இங்குள்ள தொழில் நிறுவனங்களே செய்ய வேண்டும், கடந்த ஆறு மாதத்தில் இந்த விலையேற்றத்தை நினைத்தே நிறைய்ய ஆர்டர்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் செய்வதே லாபம் ஈட்டத்தான், அதையும் தெரிந்தே நட்டப்பட யாரும் விரும்ப மாட்டார்கள்.


இந்த நூல், காட்டன், துணி ஏற்றுமதியின் உலகின் முதலிடத்தில் உள்ள சீனா கூட மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது இல்லை, மேலும் வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்கின்றனர், நம் நாட்டிலும் கூட இறக்குமதி செய்து அதை உபயோகித்து உற்பத்தி செய்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் போது வரிசலுகைகள் உண்டு. சீனாவின் உற்பத்தி திறன் என்பது மிகப்பெரிய ஆர்டர்களை கொண்டது, ஆனால் நம் நாட்டின் பலமே எவ்வளவு குறைந்த அளவு ஆர்டர்களும் நாம் செய்து முடிப்போம் என்பது தான். சீனாவின் அரசாங்கம் உற்பத்திக்காக கொடுக்கும் சலுகைகளில் 10 % கூட நம் நாட்டு அரசாங்கம் தருவதில்லை என்பதே உண்மை.


நூல் விலை ஏற்றுமதியை தடை செய்து அல்லது முறைப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பனியன் தொழிலை வளப்படுத்த வேண்டும்.

4 comments:

கவிதா | Kavitha said...

ம்ம்ம்.. தகவலுக்கு நன்றி.. எனக்கு இந்த துணி விஷயத்தில் சீனா வை நம்மாள அடிச்சிக்க முடியலன்னு ரொம்ப வருஷமா வருத்தம் இருக்கு..

சுசி said...

நல்ல விம் பதிவு விஜி.

அவங்க போராட்டத்துக்கு பலன் கிடைக்கட்டும்.

தமிழ் உதயன் said...

உங்கள் கருத்து நியாயமானதுதான். பதிவு நன்று

பழமைபேசி said...

//நூல் விலை ஏற்றுமதியை//

நூல் ஏற்றுமதியா? நூல் விலை நிர்ணயம் செய்யுறதை வெளியூருக்கு ஏற்றுமதி செய்துட்டாங்களா?? #ஐயப்பாடு-1

பஞ்சு விலை ஏறிப் போச்சு... ஆள் கூலி குடுத்தே கட்டுவழி ஆகலை... போட்ட முட்டுவழிக்குக் கூடத் தேற மாட்டேங்குது.... நூல் விலை ஏறினாத்தான் பொழப்பே நடக்கும்னு திண்டுக்கல்லுல இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் பேசிக்கிறாங்களே? அப்படி இருக்கும் போது, நூல் விலை குறையலாமா?? #ஐயப்பாடு-2

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க