Tuesday, November 30, 2010

சி.சீ, மா, கும்ப கும்ப,,கும்பகோணம்.........

கொச்சின் போலாமா? திருவனந்தபுரம்?இதற்கு நடுவில் எங்க அஸோசியேசன்ல இருந்து கோவா இல்லைன்னா நெல்லியம்பதி போகலாம்னு வேற ஐடியா? கடைசியில் நவக்கிரக கோவில் போகலாம்னு முடிவு செய்து ஒரு வழியா கிளம்பினோம். கிளம்பினோம்னு சும்மா சொல்றேன், ஆனா இருக்கும் 4 நாளில் குழந்தைகளை அழைத்து செல்வதாலும் கும்மோனம் கோவில்கள் மதியம் சாமிகளை தூங்க வைத்து விடுவார்கள் என்பதாலும் மேப் வைத்து ப்ளான் போட்டு சென்றோம்..
கோவையிலிருந்து ஜனசதாப்தி ட்ரெயினில் காலை 7 மணிக்கு புறப்பட்டோம், திருப்பூரில் என் ஃப்ரெண்ட் சரோ, கோபால் அவர்கள் குழந்தைகள் அம்ருதா, சஞ்சிதாவும் சேர்ந்து கொண்டனர்.

எங்கள் ப்ளான் படி வியாழன் மதியம் முதல் ஒரு சாமியை விடாமல் பார்த்து விடுவது என்று.. வியாழன் மதியம் கும்பகோணத்தில் தங்கினால் அதன் அருகில் உள்ள கோவில்களை பார்த்து, அடுத்த நாள் தஞ்சை பெரிய கோவிலும் இன்ன பிறவும், பிறகு மாயவரம்.

இந்த ப்ளான் மிக அருமையாக, நேரம் மிகச்சரியாகவும், அனைத்து முக்கிய தலங்களை பார்க்கும் படியும் இருந்தது. தஞ்சை பார்க்க தேவையில்லை எனில் மாயவரத்தில் தங்குவது நல்லது. நாங்கள் தஞ்சையை எங்கள் லிஸ்டில் முக்கியமாக வைத்திருந்ததால் கும்பகோணத்தில் தங்கவேண்டியதாயிற்று.

வியாழன் மதியம் 2 மணிக்கு லஞ்ச் முடித்து அன்று வியாழன் என்பதால் குரு கோவில் திறந்திருக்கும், இல்லாவிட்டால் வழக்கமாக 4 மணிக்கு தான் கோவில் திறப்பார்களாம். முதலில் ஆலங்குடி குருஸ்தலம், அங்கிருந்து திருநாகேஸ்வரம், வழியில் இருக்கும் பாடைகட்டி மாரியம்மன் கோவில், உப்பிலியப்பன் கோவில், ஐய்யவாடி ப்ரதியங்கரதேவி பார்த்து கும்பகோணம் வந்து சாரங்கபாணி கோவில்.

அடுத்த நாள் வெள்ளி அன்று காலை 6.30 மணிக்கு கிளம்பி முதலில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சை பெரிய கோவில், திருவையாறு, திங்களூர் சந்திரன் கோவில், சுவாமிமலை, மறுபடியும் கும்பகோணம் திரும்பி லஞ்ச் முடித்து ஹோட்டல் ரூம் வெகேட் பண்ணி அங்கிருந்து மங்களாம்பிகை,சூரியனார் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம் பார்த்தோம், வழியில் திருமணஞ்சேரி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரவு மயிலாடுதுறை அடைந்து அபி டாடி ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறையில் சேர்ந்தோம், அடுத்த நாள் காலை 8 மணிக்கு கிளம்பி வைத்திஸ்வரன் கோவில், திருவென்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் ( கேது) திருக்கடையூர் அபிராமி, மார்க்கண்டேயர் கோவில், அனந்த மங்களம் ஆஞ்சிநேயர் கோவில், தரங்கம்பாடி போர்ட், திருநள்ளாரு சனிஸ்வரன், கூத்தனூர் சரஸ்வதி, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்..மறுபடியும் இரவு மாயவரம்

அடுத்த நாள் சிதம்பரம், தில்லைக்காளி மட்டும் பார்த்து மதியம் அபி டாடி வீட்டில் லஞ்சு முடித்து ட்ரெயினைபிடித்தோம்.

இதான் ட்ரெயிலர்.. மெயின் பிக்ஸர் இனி ரெண்டு நாள் கழித்து,, ட்ரெயினில் மருதாணி வச்சு போற வரவங்க ட்ரெஸை கெடுத்தது, டிடிஆரே என்கிட்ட அட்வைஸ் கேட்ட கதை, அதைப்பார்த்து மக்கள் ஓட்டிய கதை, மழையோடு உறவாடி மழையோடு ஊரு சுத்தி, மழையிலேயே திரும்பி வந்தது, எல்லாகோவிலும் பிரசாதம் நல்லாருக்கும் நம்பி ஏமாந்தது, டாடா சுமோவில் ரெண்டு பக்கமும் தண்ணீர் சிதற ரெயின் கோட்டில் கேப்டன் எஃபெக்டில் போனது, எல்லாக்கதையும் வரும்.. வெயிட்டிஸ் .................:)

13 comments:

கவிதா | Kavitha said...

பொம்பளை பிள்ளைகளா லட்சணமா வளக்காம என்ன இது மருதாணி எல்லாம் வச்சிவிட்டுக்கிட்டு.. அதுவும் அந்த காலத்துல வைக்கிற மாதிரி. ம்ம்ம்.. ஒரு பொண்ணு செய்யற வேலையா இது எல்லாம்??? ஒரு அம்மாவா லட்சணமா இருக்கியா நீனு... ???!! சே சே.. உன்னை எல்லாம் எப்படி என் பிரண்டு ன்னு சொல்லிக்குவேன் வெளியில போயிட்டு....

அபிடாடி பார்ட் டைம் வேல எல்லாம் பாக்கறாரா.. சொல்லவே இல்ல... ம்ஹூம். .இனிமே அந்த பக்கம் வந்தா அபிடாடி யத்தான் பிடிக்கனும். .!! :)

அபி அப்பா said...

ஆகா சன்குழுமம் ரொம்ப கெடுத்து வச்சிடுச்சு மக்களை.நேத்து பஸ்ல 30 போஸ்டர் ரிலீஸ். இப்ப ட்ரயிலர் ரிலீஸ் பண்ணி 60 C (comment) பார்த்துவிட்டு பின்னே படம் ரிலீஸ் பண்ணுங்க. பின்னே பாட்டு ரிலீஸ் பண்ணுங்க. ரைட்டு....ஸ்டாட் மீசிக்!

சுசி said...

நான் சொன்னபடி வேண்டிக்கிட்டியா விஜி??

ஐ.. மருதாணி..

கோபிநாத் said...

ஆகா இன்னும் படம் ஆரம்பிக்கலியா!! ;)

\\இரவு மயிலாடுதுறை அடைந்து அபி டாடி ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறையில் சேர்ந்தோம்\\

!!!!! ;)))

R. Gopi said...

சீக்கிரம் எழுதுங்க. நன்றி

தினேஷ் ராம் said...

வெயிட்டிங் க்கா :-)

ரோகிணிசிவா said...

enna oru built up ,
over built up odambuku agathu

r.v.saravanan said...

சீக்கிரம் எழுதுங்க

வார்த்தை said...

nalla kodurangaiya build uppu

அமுதா கிருஷ்ணா said...

ஓ இது ட்ரைலரா..super..

Anonymous said...

aaththi namakum lift koduthu irukalamla...

R.Gopi said...

விஜி......

டிரைலர் பில்ட்-அப்....

அதுவும் இந்த கடைசி வரி :

//டாடா சுமோவில் ரெண்டு பக்கமும் தண்ணீர் சிதற ரெயின் கோட்டில் கேப்டன் எஃபெக்டில் போனது//


யம்மா.......

சாதாரணமானவள் said...

சூப்பர்... தெளிவா பிளான் பண்ணி நச்சுனு டூர் போய் இருந்திருக்கீங்க...

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க