Monday, August 5, 2013

உலகதாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் முதல் வாரம்

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி நிறைய நிகழ்வுகள் நடக்கும். 


இந்த போஸ்டர் பார்க்க சிரிப்பாவோ கிண்டலாவோ இருந்தாலும் இது நல்ல விஷயம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் உலகதாய்ப்பால் வாரம். அந்த காலத்திலேயே ஒரு அம்மா பிறந்த நிறைய குழந்தைகளுக்கு பால் ஊட்டும் வழக்கம் இருந்தது. இதில் ஒரு சதவீதம் கூட தவறில்லை. தாய்ப்பால் வங்கி அநேகமாக எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளது. ரத்தம் யார் வேண்டுமானாலும் தரலாம், தாய்ப்பால் தாய் மட்டுமே தரமுடியும், அதற்கு ஒரு நல்ல மனதும் ஆரோக்கியமான உடலும் வேண்டும். முடிந்தால் இளம் தாய்மார்கள் தரலாம்.

உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், குழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு இருக்கும் சீம்பால் ஆகும், அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.

அம்மாக்கு உணவு முறை: 

குழந்தை பிறந்ததும் சாப்பிடகூடாது என்று எந்த கட்டுப்பாடுகளூம் நீங்களே போட்டுக்கொள்ள வேண்டாம்.  சாதாரணமாக உண்ணும் உணவுகள் சாப்பிடலாம். உங்களுக்கு எது  ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.

பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பால்  சுரக்கவில்லை, குழந்தைக்கு பால் போதவில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அம்மாவின் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல் முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது,   மீறி போனால் அதிகபட்சம் குழந்தை இரண்டு வருடம் தாய்ப்பால் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் கெடும் போன்ற  காரணம் எதுவும் வேண்டாம்,அம்மா தருவது தாய்ப்பால் மட்டும் அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.

சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது,   பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால் மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும் துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி காம்பில் குடிக்க கூடாது, குழந்தையின்  வாய் கொள்ளும் வரை   மார்புகாம்புகள் இருக்க வேண்டும்

 

தாய்ப்பால் தருவது மிக பெரிய பரவசமான   பால் கொடுத்த அனைத்து அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், அம்மாவுக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

தேவையான பகிர்வு......

பல தாய்மார்கள் நீங்கள் சொன்ன பல்வேறு காரணங்கள் காட்டி தாய் பால் தருவதை நிறுத்தி விட்ட வேளையில் நிச்சயம் இது தேவை தான்....

கண்ணா.. said...

பயனுள்ள பதிவுக்கா

kaniB said...

இது ஒரு மீள்பதிவு தானே :D ... இருப்பினும் மிக நல்ல பதிவு அக்கா... பால் கொடுக்க தயங்கும் பெண்களும், அறிவுரை தேடும் பெண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்... கூடவே தந்தையர்களும்....

சுசி said...

ரொம்ப நல்ல பதிவு..

சமீபத்துல உறவுக்காரப் பொண்ணுக்கு பிறந்த குழந்தைய பார்க்கப் போனோம்.. 16 நாளிலேயே புட்டிப்பாலும் சேர்த்துக் குடுக்கறா.. எதுக்குன்னு கேட்டேன்.. தாய்ப்பால் பத்தலை போல இருக்காம்.. ஆனா நைட்ல தாய்ப்பாலை விட புட்டிப்பால் குடுத்தா குழந்தை அடிக்கடி எந்திரிக்காம தூங்கிடும்னு பெருமையா சொன்னா.. இந்த எருமைக்கு என்ன சொல்லனுட்டு பேசாம வந்திட்டேன்..

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க