கோவா...இதோட
 ஹிஸ்டரி வரலாறு, கெமிஸ்டரி எல்லாம் கூகுள்ல பார்த்துக்கலாம். ப்ராக்டிகலா 
அங்க என்ன பண்ணலாம், பார்க்கலாம், ட்ராவல் ப்ளான் கொஞ்சம் இதில் 
சொல்லலாம்னு இருக்கேன்.
பொதுவானவை :
கோவா
 ஒரு தனி இடமல்ல, ஒரு மாநிலம், தென், வட மற்றும் நடுப்பகுதி என்று 
முக்கியமானவை, சவுத் கோவா மிக அமைதியானது, 90 சதவீதம் கேரளாவை 
நினைவூட்டும். கோல்வா, கேவ்லாசியம், பெனோலியம், மொபொர் போன்ற அமைதியான 
பீச்கள் மட்டும். நடுப்பகுதி என்பது டபோலிம் ஏர்போர்ட்,   வாஸ்கோடகாமா 
.பனாஜிம், மிராமர் பீச்,  (தலைநகர்) வடபகுதி கலங்கொட், மபுசா(மாப்சா) 
பாகா,  சப்போரா, வாகட்டார், அஞ்சுனா, அக்வாடா, கண்டோலிம் பீச் போன்றவைகள் 
அடங்கியது. 
மதியம் 2-4  வரை கடைகள் 
அடைக்கப்பட்டுவிடும். லஞ்ச் டைம். 9 மணிக்கு அனைத்துமே 
அடைக்கப்பட்டுவிடும். இந்த ப்ளான் எங்க 9 நாள் கோவா டூரை பொறுத்து.
நான், பொதுவாக காலைல 6 மணிக்கு கெளம்பி லிஸ்ட் போட்டு இடம்பார்க்கும் ஆள் இல்லை, சவுத் கோவாவில் ஒரு நாள் முழுதும் வெட்டியாவே பீச்சை பார்த்து உக்கார்ந்து பொழுது போக்கினேன். ஒரு ஐடியாவுக்குதான். சவுத் கோவாவில் ராயல் ஹாத்தி மஹால், நார்த் கோவாவில் டிக்லோ ரிசார்ட்ஸ் இரண்டும் நாங்கள் தங்கிய இடங்கள்
நான், பொதுவாக காலைல 6 மணிக்கு கெளம்பி லிஸ்ட் போட்டு இடம்பார்க்கும் ஆள் இல்லை, சவுத் கோவாவில் ஒரு நாள் முழுதும் வெட்டியாவே பீச்சை பார்த்து உக்கார்ந்து பொழுது போக்கினேன். ஒரு ஐடியாவுக்குதான். சவுத் கோவாவில் ராயல் ஹாத்தி மஹால், நார்த் கோவாவில் டிக்லோ ரிசார்ட்ஸ் இரண்டும் நாங்கள் தங்கிய இடங்கள்
போக்குவரத்து :
பொதுப்போக்குவரத்து
 இங்கு ரொம்ப குறைவு. பஸ் இருக்கு, ஆனா சந்துபொந்தெல்லாம் போகாது. மெயில் 
ரோட்டில் காலையில் 9 முதல் 7 வரை மட்டுமே. அதிகபட்சம் சில இடங்களில் 
காலையில் 7 மணிக்கு பஸ் ஆரம்பிக்கும். 
தெற்கு கோவாவில் 
டாக்ஸி மட்டுமே, பஸ் வசதி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மெயின் ரோட்டில் 
இருக்கும். இங்குள்ள ஹோட்டல்களில் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் தனித்தனி டாக்ஸி 
யுனியன் வைத்திருக்கிறார்கள். ஒரு ஹோட்டல் டாக்ஸி அடுத்த ஹோட்டலுக்கு 
வராது. அவர்கள் வைப்பதே கட்டணம். சாதாரணமாக தெற்கிலிருந்து வடகோவா வர 3000 
ரூபாய் கட்டணம் ஆகும். (சுமாராக 50 கிலோ மீட்டர்) கோவாவில் எல்லா 
இடங்களிலும் டூவீலர் வாடகைக்கு கிடைக்கும், அதுவும் சவுத் கோவாவில் விலை 
அதிகம். ஒரு நாளைக்கு 500 ரூ முதல் 800 வரை வண்டியை பொறுத்து. 
பேரம்பேசினால் 400 ரூபாய்க்கு கிடைக்கும். சீசன் இல்லாத போது இன்னும் 
குறைக்கலாம். 
வடகோவா சில இடங்களில் டூவீலரில் போகலாம், 
சில இடங்களுக்கு டாக்ஸியே நல்லது. நீங்கள் தங்கும் இடத்தை பொறுத்து முடிவு 
செய்யலாம். கலங்கோட்டில் தங்குபவர்கள் அங்கிருந்து டூவீலரில் ஒருநாளும் 
டாக்ஸியில் ஒரு நாளும் திட்டமிடலாம். இங்கு ஆட்டோ கொஞ்சம் இருக்கிறது, 
ஆனால் டாக்ஸியும் ஆட்டோவும் ஒரே சார்ஜ்தான். டூவீலர் 300 ரூபாய். ஹெல்மட் 
எல்லா இடங்களிலும் தருவார்கள். 
எல்லா இடங்களிலும் 
டூவீலரில் அரைலிட்டர் பெட்ரோலுடன் தருவார்கள்,   கோவாவில் பெட்ரோல் பங்க் 
தேடுவது சிரமம், தெருவோரங்களில் விற்பார்கள். ஒரு லிட்டர் 80 ருபாய். 
நீங்கள் போகும் வழியில் பெட்ரோல் பங்க் இல்லாவிட்டால் இதை 
உபயோகப்படுத்திக்கொள்ளலாம். 
தங்குமிடம்
சவுத்
 கோவா முழுவதும் வெளிநாட்டவருக்கானது, லீலா பேலஸ், ரேடிசன் ப்ளு போன்ற 
ஹோட்டல்களும் டைம் ஷேர் ரிசார்டுகளும் அதிகம். பட்ஜெட் ஹோட்டல்கள் அங்கு 
இல்லை.  . அமைதியான பீச் மட்டுமே, வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் 
கிடையாது, அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும். 
ரிலாக்ஸ் பண்ண சிறந்த இடம்.
சிலர் பனாஜிம், வாஸ்கோட 
காமாவில் தங்குகிறார்கள் உங்களுக்கு தலைநகரில் வேலை இருந்தால் அங்கு 
தங்கலாம், இல்லாவிட்டால் நார்த் கோவாவில் தங்குவதே சிறந்தது. ஒரு நாளைக்கு 
மேல் பார்க்க பனாஜிமில் எதுவும் இல்லை. 
நார்த் கோவா, 
எல்லா விதமான பட்ஜெட்டிலும் ஹோட்டல் இருக்கிறது. அது போக கோவா வரும் 
சுற்றுலா பயணிகளுக்கென தனி வெப்சைட் உள்ளது, அதில் பார்த்தால் இலவச 
தங்குமிடம் கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலாபயணிகளில் BACK PACKERS என்னும்
 வகையினரை கவரும் வகையில் ஏராளமான தங்குமிடங்கள் உள்ளது. ஹாஸ்டல், தனியாக 
பயணிக்கும் ஒருவருக்கு துணைக்கு போனாலே போதும் அவர்களே உங்க செலவை 
பார்த்துக்குவாங்க என்பது போன்ற ட்ராவல் வித் மீ ப்ளான்கள், ஹோம் ஸ்டே, 
வீடுகளில் ஒரு ரூம் மட்டும் வாடகைக்கு, சில கஃபே ஹோட்டல் போன்ற  இடங்களில் 
நீங்கள் வேலை செய்து அங்கயே தங்கி கொள்ளலாம் போன்ற இண்ட்ரஸ்டிங்கான 
விசயங்களும் இருக்கு. 
உணவு :
எங்கெங்கு நோக்கினும் மீன், கடல் உணவுகள், விலை அதிகம். மதுபானவகைகள், ப்ரெட்.shake எனப்படும் கடலோர ஹோட்டல்கள் அதிகம்
உடை
 : ரிலாக்ஸா போங்க, ட்ரெஸ் பத்தியாரும் கவலைப்படுவதில்லை, லெக்கின்ஸ் 
போட்டாலே பெரிய ட்ரெஸ் என்ற அளவில் இருப்பதால்...வெயில் கொடுமைக்கே அதுவே 
அதிகம்
எந்த மாதம் செல்லலாம் :
நிறைய 
பணம் இருந்தா நவம்பர் முதல் ஜனவரி வரை போலாம், எல்லாமே பத்துமடங்கு அதிகம்.
 ஏப்ரல் கொஞ்சம் வெயில் இருந்தாலும் தேர்வு நேரம் என்பதால் சுற்றுலா 
பகுதிகள் காற்றுவாங்கும். மத்த மாதங்களில் எல்லா இடமும் க்யு தான்.
இனி ஒவ்வொரு பகுதியாக பார்க்கலாம்
தெற்கு கோவா :
நாங்கள்
 தங்கியிருந்தது ஒரு டைம் ஷேரிங் ரிசார்ட்,  நீச்சல்குளம், தியேட்டர், 
சூப்பர் மார்கெட், ஸ்பா, என்று எல்லாமே இருந்ததால் வெளியில் செல்ல 
வேண்டியதில்லை. கிச்சனோட சேர்ந்த அப்பார்ட்மெண்ட் என்பதால், காலையும் 
மதியமும் சிம்பிளா நாங்களே சமைத்துக்கொண்டோம். இரவில் அங்கிருந்த 
ஹோட்டல்களில் தேடி அந்த ஊர் ஸ்பெஷல் சாப்பிட்டோம். நடக்கும் தூரத்தில் 
பீச், காலையில் பீச்சில் பொழுது போக்கி பத்து மணிக்கு ரூம் வந்து ஸ்விமிங் 
பூல் நாறடிச்சு, மதியம் சாப்பிட்டு மாலைவேளையில் பீச் சுற்றினோம்
தெற்கு
 கோவாவில் கேவ்லாசியம் பீச் மிக முக்கியமானது. ஆள் அரவமில்லாத பீச்களில் 
ஹோட்டல்கள் உண்டு. அங்கு பீச்சை நோக்கி போட்டிருக்கும் நீண்ட சேர்களில் 
சும்மா உக்கார்ந்தா 100 ரூபாய் முதல் கட்டணம் தரவேண்டியிருக்கும். ஒரு 
பீச், ப்ரீஸர் வாங்கிட்டு உக்கார்ந்துக்குங்க, பொழுதுசாயும் வரைக்கும் 
எந்திரிக்கவே சொல்ல மாட்டாங்க. மாலை செல்வதை விட பீச் காலை வேளையில் 
அவ்வளவு அழகு, அமைதி,சுத்தமும் கூட. 
நீங்கள் இங்கு 
தங்காவிட்டால் டாக்ஸியில் மட்டுமே வரவேண்டியிருக்கும். வெயில் கொளுத்தும் 
பகல் பொழுதுகளில் பீச்சில் இருப்பதை போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை. எல்லா 
பீச்சும் அதிக பட்சம் ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும். கோல்வா பீச் 
வாட்டர் ஸ்போர்ட்ஸ் நடத்தும் இடம். இங்கும் சில ஹோட்டல்கள் உண்டு, 
சாப்பிடுவது உங்கள் விருப்பம். (ரிஸ்க் எடுக்க நான் ரெடியா இல்லை ) 
ஒரு
 நாள் டூவீலரில் இந்த பீச் எல்லாம் சுற்றி வந்தோம், மதியம் முதல் அடுத்த 
நாள் வரை ஒரு நாள் என்று கணக்கில் எடுத்திருந்ததால், பெரும்பாலும் மாலை, 
காலை வேளைகளில் பேரழகுடன் இருந்த அமைதியான பீச்கள் மனதை கொள்ளை கொண்டதை 
ஒத்துக்கொள்ளனும். ஆளரவமில்லாத அமைதியான குறுகிய தெருக்கள், கேரளாவை 
நினைவூட்டும் வீடுகள்.
இந்த மேப்பில் இருக்கும் அனைத்து 
பீச்சுகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். நல்ல வண்டி இருந்தால் பீச் 
ஓரமாகவே போலாம்.  கோவா சித்ரா மியுசியம் ஒன்று உள்ளது, நுழைவுகட்டணம் 300, 
வெள்ளி விடுமுறை. நாங்கள் உள்ளே போகலை. கோவாவில் பழைய கலாச்சாரம் குறித்த 
இடம். 

தெற்கு
 கோவாவில் உணவு மிகவும் விலை அதிகம். எனினும் சில வெப்சைட்களின் 
பரிந்துரைப்படி சென்ற ஹோட்டலில் ஒன்று மொக்கை, இன்னொறு நிஜமாவே சூப்பர்.  
கோல்வாவிலிருந்து கேவ்லாசியம் போகும் வழியில் ஒரு சர்ச் பஸ் ஸ்டாண்ட் 
உள்ளது, அதற்கு பக்கத்து சந்தில் ஒரு வீட்டில் கோவன் பிஷ் கறி மீல்ஸ் 
பார்சல் தருவார்கள், வெஜ் மீல்ஸும் உண்டு. தவறவிடாமல் சாப்பிடவும். மைக்ஸ் 
ப்ளேஸ் என்ற ஒரு ஹோட்டல் அதிகம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது, உணவு வெகு 
சுமார் என்பதோட விலையும் அதிகம்.
முதல் நாள் மாலையில் அகோடா போர்ட், அடுத்த நாள் டூவீலரில் மேலிருந்து கீழ் வர தீர்மானித்து முதலில் சப்போரா போர்ட், வேகடார், அஞ்சுனா, பாகா, என்று பார்த்தோம், மூன்றாம் நாள் டாக்ஸியில் பனாஜிம், அதனை சுற்றியுள்ள பகுதிகள், சென்றோம்.
 பம்பாய் 
படத்தில் உயிரே படத்தில் வரும் இடம் எல்லாம் ஒரே இடம்னு நினைச்சு 
ஏமாந்திருந்தேன். எல்லாம் வேற வேற இடத்தில எடுத்து ஒட்டவைச்சி 
ஏமாத்திட்டாரு மணிரத்னம். 
அகோடா போர்ட் அதில் ஒன்று. 
சப்போரா 
 ஃபோர்ட், கொஞ்சம் மேல ஏற கஷ்டம் தான். சரளை கற்களால் ஆன சிறு குன்று, 
கொஞ்சம் ஏமாந்தாலும் சறுக்கிடும். தகர்க்கப்பட்ட கோட்டையின் மிச்சம்.
வேகடார்,
 குருவாயுரப்பா பாட்டு வந்த இடம், அஞ்சுனா பீச்சும். பாகா வாட்டர் 
ஸ்போர்ட்ஸ். எங்களுக்கு ஆர்வம் இருந்தது, கூட்டமில்லை, என்றாலும் சில 
காரணங்களால் வாட்டர் ஸ்போர்ஸ் போகலை. குரூப்பா போறவங்க மிஸ் பண்ணாதீங்க. 
கலங்கோட் பீச் மிக அருகில் என்பதால் இரவு வெகு நேரம் தினமும் பீச்சில் 
கழிந்தது. ஒவ்வொரு ஞாயிறும் இங்கு லைவ் மியுசிக் நடக்கிறது.
இங்கு
 கலாங்கெட்டில் உடுப்பி ஹோட்டல், மேலும் சில சைவ ரெஸ்ட்ரண்ட் இருக்கிறது. 
தவறவிடாமல் சாப்பிட வேண்டியது பிபினிகா என்னும் கோவன் ஸ்விட், தொதல் 
என்னும் தேங்காய் அல்வாவும். பாகா ரோட்டில் இன்ஃபாண்டிரியா என்னும் 
பேக்கரியில் இவை இரண்டும் ப்ரெஷ்ஷா கிடைக்கும். 
பனாஜிம் :
செயிண்ட்
 ப்ரான்ஸிஸ் சர்ச், ஆர்க்யாலஜி ம்யுசியம், பெசிலிகா ஆஃப் பார்ன் ஜீஸஸ், சே 
கதேட்ரல், லேடி ஆஃப் இமாக்யுலேட் கான்செப்சன். அகஸ்டின் ஆர்ச் என்ற இடம் 
ஒரு ராணியின் வரலாற்று நிகழ்வின் மிச்சம். இங்கு ஸ்பைஸ் கார்டன் என்ற 
இடத்தில் மிளகு, முந்திரி போன்றவற்றின் ம்யுசியம் மதிய உனவுடன் இருக்கிறது,
 டோனா பவுலா என்னும் இடம் மூன்று நதிகள் ஒன்றாக அரபிக்கடலில் கலக்கும் 
இடம், மிராமர் பீச் இதெல்லாம் பார்த்து மாலை இங்குள்ள சிறு கப்பலில் ஒரு 
மணி நேரம் செல்ல 300 ரூபாய், இதற்கு டிக்கெட் அங்கேயே வாங்கலாம் அல்லது 
கவர்மெண்ட் அப்ரூவ்ட் மதுபானக்கடைகளிலும் வாங்கலாம். துறைமுகத்தில் கூட்டம்
 நிறைய இருக்கும். பனாஜிம் மார்கெட் பின்புறம் கவர்மெண்ட் அப்ரூவ்ட் மதுபான
 கடை உள்ளது, அங்கேயே டிக்கெட் வாங்கிக்கலாம். அந்த கப்பலில் ம்யுசிக் 
ஒவ்வொரு தரப்பினராக ஆட வைக்கின்றனர். அங்கேயே சிற்றுணவு கூடமும் உண்டு. 
(வாயில வைக்க வெளங்காது என்பது வேற விசயம்) ஒரு மணிநேரம் முடிந்ததும் 7 
மணிக்கு திரும்பி பனாஜிம் ஷாப்பிங் இருந்தால் பண்ணலாம். பனாஜிமில் மதிய 
உணவு ரிட்ஸ் க்ளாசிக் என்னும் இடத்தில் சாப்பிட்டோம். சுவையான சூப்பரான 
உணவு, கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் சாப்பிடனும். பொதுவா கோவா முழுவதும் உணவு
 கொஞ்சம் காஸ்ட்லிதான். சாதாரண உடுப்பி ஹோட்டலில் தர்பூசணி ஜூஸ் 160 
ரூபாய். ஆனால் ரிட்ஸ் க்ளாசிக் அத்தனை காஸ்ட்லியும் இல்லை உணவும் மிக 
அருமை. கோவா போனா மறக்காம இங்க கோவன் பிஷ் கறி மீல்ஸ் ட்ரை பண்ணுங்க. எல்லா
 இடத்திலும் கோவன் கிஷ்மூர் தராங்க. ரெசிபி சீக்கிரம் போடறேன். ட்ரை பிஷ் 
தேங்காய் சேர்த்த சைட் டிஷ். 
ஷாப்பிங்  
No comments:
Post a Comment
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க