Friday, June 17, 2011

அக்கம் பக்கம்

கோவையில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.. இன்னொரு தமாசா ஆகாமல் இருக்கனும். என்னதான் சட்டம் போட்டாலும் நம்ம மக்கள் அதை ஸ்டைலா மாத்திடுவாங்க. ஹெல்மெட் வண்டி பெட்ரோல் டாங்க் மேல், கண்ணாடி மேல், சைடில் என்று தலையைத்தவிர எல்லா இடமும் தொங்கியது. தலைதொங்காமல் இருக்கத்தான்யா ஹெல்மெட்.

---

தினம் புதுபுதுப்பாடல்கள் கேட்க நல்லாத்தான் இருக்கு. சமீபத்தில் கேட்ட பாடல் 180. நல்லாத்தான் இருக்கு. கேட்டதும் கடுப்படித்த பாடல் வேங்கை படத்தில் வரும் ஓப்பனிங் பாட்டு. கதை, சதைன்னு காது வலிக்குது..ஏன்யா ஏன்?
----
சமீபத்தில் தான் ஆடுகளம் பார்த்தேன், ஒத்தை சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் என்னா ஆட்டம். பார்க்கும் போதே அந்த சந்தோசம் நமக்கும் தொற்றி ஒரு ஆட்டம் போடலாம்னு தோனுச்சு. 60 வருச பழமையான வீட்டில் இருக்கோம்னு நினைப்பு வந்து கம்முனு இருந்துட்டேன். இந்தப்பாட்டை பார்த்து தனுஷ் ரசிகையா மாறலாமான்னு யோசிக்கும் போது வேங்கை படப்பாட்டை கேட்டேன்..என்ன கொடுமை தனுஷ் இது.. வரட்டும் பார்ப்போம்.

------
பள்ளி திறந்து எல்லாரும் செட்டில் ஆகியாச்சு. விலைவாசி ஏற்றத்துக்கு வேன் ட்ரைவர் மட்டும் தப்புவாறா என்ன? போன வருசம் வேனுக்கு 1,100 ரூபாய் ரெண்டு பேருக்கும் சேர்ந்து கொடுத்தேன், இந்த வருசம் அது 2,000. பள்ளிக்கூடம் பக்கமா இருந்தா நடந்தே போயிடலாம். அதனால் ஸ்கூல் பஸ்ஸை சரணடையப்பட்டது. சமச்சீர் இதுக்கு வர வாய்ப்பு உண்டா?

------
கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு ஃப்ரீயா ஊருமுழுதும் ஏசி பண்ணியது போல்.. சொர்க்கமே என்றாலும்.....

----

ஒரு க்ரூப் டூர் போலாம்னு எங்க சங்கத்தில முடிவு செய்து அதற்கு ஒருங்கினைப்பு வேலை நடக்குது. இரண்டு பெண்கள் இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். 16 பேரை எப்படி கூட்டிட்டு போயி திருப்பி கொண்டு வந்து சேர்த்தப்போறேன்னு நினைச்சாலே கண்ணைக்கட்டுது. ஆனால் சில பல பதிவு எழுத விசயம் கிடைக்கும்.. நரி கிழக்க போனாலும் மேற்கே போனாலும்...............

--------
எங்க ஊருக்கு வரவங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்கலாம்னு :) கோவை வரவங்க எல்லாருக்கும் அன்னபூர்னா தவிர ஹோட்டலே இல்லாத மாதிரி ஒரு பில்டப்பு இருக்கு. அதையும் தாண்டி வயித்தை கெடுக்காத காசையும் பிடுங்காத நல்ல ஹோட்டல் நிறைய்ய இருக்கு.

சாப்பாடு : ரொம்ப பழைமையான ஹோட்டல்.கிட்டத்தட்ட சுதந்திரத்திற்கு  முன் இருந்து இருக்கும்னு நினைக்கிறேன். C.S. MEALS. மதியம் மட்டுமல்ல இரவும் கோவையில் ஃபுல் மீல்ஸ் இருக்கும் இரண்டு உணவகங்களில் இது ஒன்று. ( இன்னொன்று கீதா கபே) மதியம் கெட்டித்தயிர், இனிப்பு ( இது மட்டும் சுமாரா இருக்கும்) வத்தக்குழம்புன்னு நல்ல லஞ்ச். அதே இரவில் நீர்த்த மோர், ஒரு கூட்டுன்னு சிம்பிள் சாப்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கு, அவங்களோடதே அருகில் டிபன் செண்டரும் வச்சிருக்காங்க அங்க அடை, அவியல், வெண்ணெய், வெல்லம்...ம்ம்ம்ம்ம்ம் சூப்பர். எதிரில் கலெக்டர் ஆபிஸ் இருப்பதால் ஓரளவிற்கு கூட்டமும் இருக்கும். நல்ல சைவ ஹோட்டல்.

-----


கூகுள் பஸ்ஸில் முழு நேரம் போவதால் இந்த பதிவு டைரி எழுதும் பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி கொஞ்சமாவது எழுதனும்னு என்று பாடிகார்ட் முனிஸ்வரனை வேண்டிக்கறேன்.

11 comments:

எல் கே said...

//இனி கொஞ்சமாவது எழுதனும்னு என்று பாடிகார்ட் முனிஸ்வரனை வேண்டிக்கறேன்.//

இதுமட்டும் நடக்கக்கூடாது முனீஸ்வரா

சமுத்ரா said...

நன்றாக இருந்தது..தொடருங்கள்

அமுதா கிருஷ்ணா said...

அக்கம் பக்கம் நல்லாயிருக்கு..

selventhiran said...

ஓ...ஒரு தென்றல்... புயலாகி...

Unknown said...

என்ன கொடுமை சார் இது?

மதுரை சரவணன் said...

samacheer school bus ukkum nalla sinthanai... vaalththukkal

சி.பி.செந்தில்குமார் said...

>>கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு

adhukku 2 காரனங்கள்

1. தமிழ்நாட்டிலேயே மரியாதை நிறைந்த மனிதர்கள் உள்ள ஊர் லிஸ்ட்டில் முதல் இடம் கோவைக்கு.. ( 2ஆம் இடம் ஈரோடு)

2. சிறுவாணித்தண்ணீர்

சந்திர வம்சம் said...

பள்ளி திறந்து எல்லாரும் செட்டில் ஆகியாச்சு. ஆனா புத்தகம் தான் வரவில்லை!!!!

தமிழ் உதயன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Saravanan Arumugam said...

சமீபத்தில் தான் ஆடுகளம் பார்த்தேன், ஒத்தை சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் என்னா ஆட்டம். பார்க்கும் போதே அந்த சந்தோசம் நமக்கும் தொற்றி ஒரு ஆட்டம் போடலாம்னு தோனுச்சு. 60 வருச பழமையான வீட்டில் இருக்கோம்னு நினைப்பு வந்து கம்முனு இருந்துட்டேன்.

yes, indha oru paattukkaagave avarukku national award kedaichirukkum. Andha ponnu ivara thaan love pandren nu sonnadhu, oru expression kuduppaaru paarunga... chance-e illa... ethana thadava venaalum indha paatta paathutte irukkalaam... dance kathukkanum aasai kooda varum... try pandradhu dhaan illa...

Saravanan Arumugam said...

கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு ஃப்ரீயா ஊருமுழுதும் ஏசி பண்ணியது போல்.. சொர்க்கமே என்றாலும்.....

Munnaadi ellaam Trichy, Tanjore dhaan dream place to settle ah irundhichu. Ippo konja naala, CBE vandhiruchu. Sivakumar, Isha Yoga Centre nu neraiya inspirations...

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க