Friday, December 30, 2011

ஐ லவ் யு செல்லம்

வலைப்பதிவு என்பதே ஒரு கொசுவர்த்திதானே. இந்த வருச கொசுவர்த்தியை சுத்திப்பார்க்கிறேன். ஒவ்வொரு வருசமும் முடியும் போது ஏகப்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்க்கையை செப்பனிடுகிறது.

இந்தவருடம் ஆரம்பமே அமர்க்களம். இடது கை உடைந்து 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டுடன் தான் வரவேற்றேன். ஊரே புத்தாண்டு கொண்டாடும் போதும் கங்கா மருத்துவமனையில் வலியில் புலம்பிட்டு இருந்தேன்.  போனவருடம் முழுதும் இழப்புகளின் வருடம், அப்பா இறந்தது, சில பல பர்சனல் இழப்புகள்னு ஒரே ஆர்ட் ப்லிம் ரேஞ்சுக்கு இருந்தது. இந்தவருடம் மட்டும் சளைச்சதா என்ன?

ஜனவரி கைகட்டுடன் வரவேற்று அனுப்பி பிப்ரவரி  வரும்போதே வாழ்வில் மறக்க முடியாத மாதமாக வந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று என் அம்மாவின் மரணம், அதை அடுத்து 4 நாட்களில் மாமாவின் மரணம். மரண அடின்னு சொல்லுவாங்களே அதுதான் இது.


மார்ச் இத்தனை இழப்பிற்கு ஈடு செய்வது போல் எங்க வீட்டின் புது வரவு, என் தங்கை பையன் நந்தன். அவன் சிரிப்பு மட்டுமே எங்கள் இழப்பை கொஞ்சம் தள்ளி வைக்கிறது. ஏப்ரல் மாதம் கட்டு பிரித்து கை ஒரளவிற்கு வந்ததும் அப்பாடான்னு இருந்தது. இதற்கிடையில் இழந்த இன்னொரு பொருளும் மறுபடியும் கிடைத்தது. இனிமேல் பத்திரமா வைச்சுக்கனும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்கள் மருத்துவமனையிலேயே பெரும்பாலான நாட்கள் கழிக்க வேண்டியிருந்தது. மாமியாரின் மரணம் வரை இந்த கதை தொடர்ந்தது. மரணங்களை மிக அருகில் பார்த்து பார்த்து மனது அடப்போ இவ்வளவு தானா என்று சலிக்கும் அளவுக்கு இந்த வருடம் எல்லாவிதத்திலும் பாடம் கற்றுக்கொடுத்தது.

போலியான மனிதர்களை வழக்கம் போல கடைசியில் கண்டு ஓடிப்போயிடுன்னு துரத்தி விட்டு, மறுபடியும் வண்டிசக்கரத்தில் எண்ணெய் விட்டு வாழ்க்கை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையே ஐ லவ் யு. இப்பத்தான் தினம் தினம் வருவதை எதிர்கொண்டு வாழ பிடிக்கிறது. எவ்வளவு சுவாரஸியமா இருக்கிறது. மனிதர்கள் அதுவும் சாதாரணமான மனிதர்களா? எவ்வளவு வகை, ஒவ்வொரு மனிதனும் நிழலில் ஒன்று வெளிச்சத்தில் ஒன்று, இருட்டில் ஒன்றுன்னு ஏகப்பட்ட முகமூடிகளுடன், அவர்கள் நிகழ்த்தும் அல்லது அவர்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள், கவலைகள், காதல்கள், மரணங்கள், சிரிப்புகள், வேதனை, வலி, சந்தோசம், எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

இத்தனை விசயங்களுக்கு நடுவில் சில பல ஊர் சுற்றல்கள், சிங்கப்பூர், மலேசியான்னு பெரிய கும்பலை கூட்டிட்டு போயி கொண்டு வந்து பத்திரமா விட்டது பெரிய அனுபவம். வழக்கம் போல் என் நட்புகளும் உறவுகளும் சீண்டியும் சிரித்தும் தொடர்கிறது.

இணையத்தில் வந்த இந்த 5வதுவருட ஆரம்பம் மகிழ்ச்சியாகவே தொடங்குகிறது. கூகுள் பஸ் சோர்ந்து போன, தனிமையான  பல தருணங்களில் தோள் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த நட்புகளுக்கு ஒரு தனி நன்றி. எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

இந்த வருடம் புதுசா எதுவும் உறுதிமொழி இல்லை, பிடிக்காததை சட்டுன்னு தூக்கி எறியும் இந்த குணம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா மனிதர்களை படிக்கனும். அம்புட்டுதான். வழக்கம் போல கலாய்ச்சு, கலாய்க்கப்பட்டு, கவலைகளை பிரித்து தீர்வு கண்டு சந்தோசமா இருக்கனும். நீங்களும் உங்க எண்ணங்கள் எல்லாம் ஈடேறி சந்தோசமா இருங்க.

சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு எப்பவும் அதற்கு தேவை. ஜனவரி ஒன்று அன்று அறிவிக்கலாம்னு இருக்கோம். அதற்கான உங்க ஆதரவுக்கு இப்பவே ஒரு பெரிய நன்றி சொல்லிக்கறேன்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

18 comments:

மகி said...

அட நானும் கொசு வத்தி புகையில தெரியறனுங்களா....

கோபிநாத் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா ;-)

Vijaya Gopal said...

யக்கா, நீ, நான், செல்வா, மற்றும் பலரும் ஏமாந்த அந்த சம்பவத்தப் பத்தி நீ வாயே தெறக்கலியே! 2011ல முக்கியமான சம்பவம். அட்லீஸ்ட் கமெண்ட்லயாச்சும் சொல்லிருக்கா. இல்லைன்னா மனைவி கால்ல விழுந்து நான் சாப்பிட்டுட்டு வந்த மூணு இட்லி எனக்கு செரிக்கவே செரிக்காது!

Vijaya Gopal said...

மயிலு (அக்கா) சப்பானிய (அத்தான் ராம்) பத்தி இதுல ஒரு வார்த்தை கூட எழுதலியேக்கா! பாவம் வருத்தப் படப் போறாரு. நீ ப்ளாக் எழுத போன் பில்லு கட்டுற அந்த அப்பாவி ஜீவனப் பத்தியும் ரெண்டு வார்த்தை சேத்து எழுதிடுக்கா!

விஜி said...

@மகி நீங்க தெரியாமல் ?

விஜி said...

தேங்க்ஸ் கோபி :)

விஜி said...

@விசய கோவாலு,, ரொம்ப முக்கியம்

சுரேகா.. said...

நல்லா இருக்கு!! :)

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சுசி said...

லவ் யூ டூ ச்செல்லம்..
எல்லாருக்கும் எங்க எல்லாரோடதும் புத்தாண்டு வாழ்த்துகள்..

RAVI said...

//சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன்//
சொல்லிட்டீங்கல்ல. கவலப்படாதீங்க.பாத்துக்குறோம் :)))
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

:) புத்தாண்டு வாழ்த்துகள்க்கா

அஹமது இர்ஷாத் said...

புத்தாண்டு வாழ்த்துகள் மாதாஜி..

ILA(@)இளா said...

//Contributors
விஜி
விஜி
//

Double Actingஆ

விஜி said...

@சுரேகா தேங்க்ஸ் தல

@மகேந்திரன் நன்றிங்க

விஜி said...

@சுசி தேங்க்ஸ் செல்லம்

@ரவி கொஞ்சம் பார்த்து கவனிச்சுடுங்க

விஜி said...

ஆதவா நன்றி :)

இர்ஷாத் தேங்க்ஸ் :)’

இளா கண்டுபிடிச்சிட்டீங்களே வெரிகுட் :)

ஏ. ஆர். சரவணன் said...

எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

nalla manasu.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க