Monday, December 12, 2011

அக்கம் பக்கம்

பக்க்த்து மாநிலமான கேரளாக்கும் நமக்கும் பங்காளி தகராறு முட்டிகொண்டு நிற்கும் இந்த நேரத்தில் தண்ணி தராத கேரளாவை கடுமையா கண்டிச்சுட்டு, முடிஞ்சா ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு பணிவுடன் உம்மன்சாண்டி அங்கிளை கேட்டுக்கிறேன். வாளையாறு டேம்க்கு யாராவது போயிருக்கீங்களா? அதுவும் இருப்பது தமிழ்நாட்டில் தான் ஆனால் பயன் கேரளாவிற்கு..இதுக்கு ஒரு நாளைக்கு தனியா பொங்கலாம். கோவையில் பாதிக்கும் மேல் கேரள மக்கள் தான் இருக்கிறார்கள், தனியே கோவில், க்ளப், சங்கம், பள்ளிக்கூடம் என்று மினி கேரளாவே இருக்கிறது. ம்ம்ம் பெருந்தன்மையின் பரிசுதான் இது.

-------
கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி

------
தங்கம்னு பேப்பரில் எழுதி லாக்கரில் வைக்கும் நிலைமைக்கு வந்துடுவோம் போல. எங்களை மாதிரி குடும்ப இஸ்திரிகளுக்கு விலையை கேட்டாலே திக்குன்னு இருக்கு. சேமிப்பின் பழக்கத்தை வலியுறுத்தும் தங்க விலையேற்றத்திற்கு ஒரு ஜே !!

------
 எங்கள் தெருவில் ஒரு பெண், கார்ப்பரேசனில் பணி புரிகிறார். 42 வயதானவர். அசாதாரணமான உடல் பருமன். அதைக்குறைக்க அவர் விஎல்சிசி சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டாராம். அதில் அவரின் இரு தொடைகளும் உணர்ச்சி இழந்து போனது. உடல் முழுதும் கொழுப்பு கட்டிகளும் படர்ந்துவிட்டது. ஏஞ்ஜெல் என்று இன்னொரு உடல்பருமன் குறைக்கும் நிலையம் சென்று சிகிச்சை எடுத்ததில் அவருடைய தோல் தொடையிலிருந்து கால் பாதம் வரை கருகினது போல ஆனது.

யாருக்கு உடல் எடை குறைக்கனுமோ தயவுசெய்து சாதாரண உடற்பயிற்சி, சரியான உணவு முறைமூலம் மட்டுமே குறைக்க முயற்சி செய்யுங்கள்,. நான் அந்த பெண்னை பற்றி சொன்னது 10 சதவீதம் தான். உக்கார்ந்தால் எழ முடியவில்லை. திரும்பி படுக்க முடியவில்லை. :(


இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்
--------
நேத்து பாரதியார் பிறந்த நாள், இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை. பாவம் பாரதி. இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பார்,. இம்புட்டு பாசக்காரங்களா இருக்காங்களேன்னு.. சூப்பர் ஸ்டார் வீட்டு சமையல் காரருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிடுங்க. வரலாறு முக்கியம்.-------
கூகுள் பஸ்ஸில் இருந்த வரைக்கும் பொழுது போனதே தெரியாது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் விருந்தினர் வீடு மாதிரி இருக்கு, போகலாம்னும் தோனுது போனதும் எப்ப கெளம்புவோம்னும் இருக்கு :)) செட் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல.
---

தினம் பேப்பர் பார்க்கவே பயமா இருக்கு. இந்த வாரத்தில் 3 பெண் குழந்தைகளுடன் அம்மா தற்கொலை திருப்பூரில், கணவன் மனைவி குடும்பத்துடன் தற்கொலை, பெங்களூரில் 4 டாக்டர்கள் தற்கொலை.. என்ன நடக்குது.. சாவு அம்புட்டு ஈசியா போயிடுச்சா?

------

ஈரோடு பதிவர் சங்கமம் வரும் ஞாயிறு நடக்கிறது. மேலதிக தகவலுக்கு http://www.erodekathir.com/2011/12/2011.html. வாங்க அங்க மீட் பண்ணுவோம் :)

13 comments:

ஈஸ்வரி said...

வந்தது வந்தாச்சு...:)

Anonymous said...

//திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை.// நான் அப்படியில்லை என்பதை அழுத்தம் திருத்தம் சொல்லிக்கிறேன்..

Anonymous said...

//ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு // இதுக்கு பதிலா உங்களை கேரளாவுக்கு கடத்திவிடலாமுன்னு அம்மா கூட பேச்சு வார்த்தை நடத்த ஆந்திர அரசின் சார்ப்பா நான் போக போறேன்..

Anonymous said...

//இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்// அவசியம் அவசியம்..

Anonymous said...

//கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி// டோண்ட் வொர்ரின்னு உமக்கு சொல்லிகிட்டு பதிவா போட்டு எங்களை வருச கடைசியில் ஒரி பண்ண வச்சிடாத தாயே..ஏற்கனவே இது சோதனை ஆண்டாவே போச்சு எனக்கு..

Altu said...

Mm.. Vanthom.. Rasitchom..

Altu said...

vanthom.. Rastchom.. Keep it up..

பெம்மு குட்டி said...

9 paragraph இருக்கு...... நீங்க பெரிய எலுத்தாலர் போலிருக்கு :-))))))))))

Vidhya Chandrasekaran said...

\\ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு //

கூடவே பொண்டாட்டியையும் அனுப்பி வைப்போம். பரவால்லையா.

இப்படிக்கு
உம்மன் சாண்டி

சுசி said...

கலந்து கட்டி அடிச்சிருக்கே :))

விஜி said...

ஈஸ்வரி :)

டமிலு.. நடத்து நடத்து

விஜி said...

Altu thanks

வித்யா பொறாமை :)

விஜி said...

பெம்மு :)) புரிஞ்சுடுச்சா ?


சுசி தேங்க்ஸ் செல்லம்

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க